
பினாங்கு மார்ச் 24-
பினாங்கு மாநிலத்தில் கோவில்கள் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலம் தெரிவித்தார். 
கோவில்களின் செயல்பாடுகள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்கு முக்கியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கோவில்கள் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்
பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து கோவில்கள் சமூகத்திற்கு முக்கியமானவை என்பதால், அவற்றின் நிர்வாகம் சீராக இயங்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆகவே மகிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்பு பேரவை மற்ற மாநிலங்களில் உள்ள கோவில்கள் மீது கவனம் செலுத்தலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்

