மைலோ – ஸ்போர்ட்ஸ் டோட்டோ – 100 பிளாஸ் நிறுவனத்திற்கு பாராட்டு!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் மார்ச் 24
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி பத்துகேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் குடும்ப தின விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழா வெற்றி பெற ஸ்போர்ட்ஸ் டோட்டோ, மைலோ மற்றும் 100 பிளாஸ் குளிர் பான நிறுவனங்கள் முழு ஆதரவு வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் இந்த மூன்று நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles