

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 இடங்கள், விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. அதேநேரத்தில், மநீம போட்டியிடாது என்று அறிவித்த நடிகர் கமல், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்
திமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

