



கோலாலம்பூர் ஏப் 1-
இன்று உலகம் முழுவதும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
குறிப்பாக பகாங் மாநிலத்தில் உள்ள மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தினர்.
அதேசமயம் செந்தூல் தண்டாயுதபாணி ஆலயத்திலும் பங்குனி உத்திர திருவிழா களைக்கட்டியது.
காலையில் சிறப்பு பூஜைக்கு பிறகு ஜாலான் அம்பாங்கில் இருந்து ரதம் புறப்பட்டது.
மூன்று மணி நேரத்திற்கு பிறகு ரதம் செந்தூல் தண்டாயுதபாணி ஆலயம் வந்தடைந்தது.
இரத ஊர்வலத்தின் போது காவடி ஆட்டம் இடம் பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
பங்குனி உத்திரம் முருகப் பெருமானின் அருளைப் பெறும் ஒரு முக்கிய திருவிழாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செந்தூல் தண்டாயுதபாணி ஆலய பங்குனி உத்திர திருவிழாவில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், காவல் துறை உயர் அதிகாரிகள், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சுரேஸ், சந்திரசேகரன், மலேசிய நகரத்தார் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், உட்பட செந்தூல் காவல் நிலைய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

