மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் 66 அடி உயர தண்டாயுதபாணி சிலை அமைக்கப்படும்! தலைவர் பி. ராமன் அறிவிப்பு

மாரான், ஏப்.1-
நாட்டின் மிகத் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் இந்த ஆண்டின் பங்குனி உத்திரத் திருவிழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் ,அலகு குத்தியும் முருகப் பெருமானுக்குத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். தவிர பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றதாக ஆலயத் தலைவர் பி. ராமன் தெரிவித்தார்.

ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்துப் பேசிய பி. ராமன், விரைவில் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய வளாகத்தில் 66 அடி உயரத்தில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பிரம்மாண்ட ஸ்ரீ தண்டாயுதபாணி சிலை அமைக்கப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles