பெருநடை வீரர் சரவணனுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உதவிக்கரம்!

ஜோர்ஜ் டவுன், ஏப் 1-

கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு 50 கிலோ மீட்டர் பெரும்நடை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்து சாதனை படைத்தார் ஜி. சரவணன்.

தங்க மகன் என்று அழைக்கப்படும் சரவணன் இப்போது நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ராயர் மற்றும் துணை தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் இன்று பெருநடை வீரர் சரவணனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் அவருக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டதாக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles