
கோலாலம்பூர், ஏப் 2-
அளவுக்கு அதிகமாக மது அருந்தி மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி மற்றவர்களுக்கு மரணம் விளைவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு கிள்ளானில் நடந்த கோரமான சாலை விபத்தில் 33 வயதான அமிருல் ஹபிஸ் ஓமர் என்பவர் பரிதாபமாக மரணமடைந்தார்.
மதுபோதை மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதால் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றங்களை செய்வோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம்.
ஆகவே மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுவதை கடுமையாக கண்டிக்கிறோம் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

