மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் 300 மாணவர்கள் நிதியுதவி பெற்றனர்

பந்திங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300 மாணவர்கள், எம்.பி.ஐ. 2026க்கான மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றனர்.

இப்பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, குறிப்பாக பள்ளி ஆரம்பக் கட்ட முன் ஏற்பாடுகளுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராயுடு கூறுகையில், இந்த திட்டம் பெற்றோரின் சுமையைக் குறைப்பதோடு, மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்தை மேலும் தயார்நிலையுடன் தொடங்க ஊக்கமளிக்கிறது என்றார். இந்த உதவி, மாணவர்கள் நிதி நெருக்கடியின்றி பள்ளிப் பருவத்தைத் தொடங்க உதவும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“டத்தோ மந்திரி புசார், டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசு, நிதிப் பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் கல்வியில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும்,” என அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles