Spm தேர்வில் மாணவி தர்ஷினி அனைத்து பாடங்களிலும் A பெற்று சாதனை!

ரவாங், ஏப்ரல் 3-
2025 ஆண்டுக்கான SPM தேர்வில் தர்ஷினி த/பெ வெங்கடேஷ்வர ராவ் அனைத்து பாடங்களிலும் A பெற்றுள்ளார்.

ரவாங் கண்ட்ரி ஹோம்ஸ் தாமான் டேசா இடைநிலைப் பள்ளி மாணவியான தர்ஷினி அறிவியல் பிரிவு மாணவியாவார்.

தனது கடின உழைப்பும், ஒழுக்கமும், ஒருமுகத் தன்மையும் இவர் சிறந்த தேர்ச்சியை பெறமுடிந்தாக தர்ஷினி கூறினார்.

மேலும், தனக்கு உறுதுணையாக இருந்த னது பேற்றோருக்கும், ஆசியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தர்ஷினி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தர்ஷினியின் தந்தை வெங்கடேஷ்வர ராவ், செலாயாங் தொகுதியின் ம.இ.கா (MIC) தலைவராகப் பொறுப்பேற்று வருகிறார்.

மகளின் இந்த சிறப்பான தேர்ச்சி குறித்து அவர் பெருமிதம் தெரிவித்ததுடன், குடும்பத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக வெங்கடேஷ்வர ராவ் கூறினார்.

தர்ஷினியின் தாயாரும் மகளின் சாதனையைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து உயர்கல்வியில் மேலும் சாதிக்க தர்ஷினிக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles