ம.இ.கா அலோர் ஸ்டார் தொகுதியின் கிளைக் கூட்டத்தில் எஸ்.பி.எம் தேர்வில் 8A-க்கள் பெற்று சாதனைப் படைத்த மாணவனுக்குப் பாராட்டு!

அலோர் ஸ்டார், ஏப்.4-
ம.இ.கா அலோர் ஸ்டார் தொகுதியின் தஞ்சோங் பெண்டாஹாரா மற்றும் கோத்தா ஸ்டார் கிளைகளின் கூட்டங்கள் இன்று நடைப்பெற்றன.

2025-ஆம் ஆண்டின் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் 8ஏக்களைப் பெற்று சிறந்த தேர்ச்சிப் பெற்ற ஜித்ரா இடைநிலைப்பள்ளியின் மாணவர் திவாகர் குமரேசனுக்கு ம.இ.கா அலோர் ஸ்டார் தொகுதித் தலைவர் திரு. ராஜ்குமார் நாய்டு கிருஷ்ணன் நாய்டு அவர்கள் கௌரவித்து அன்பளிப்பு வழங்கினார்.

மாணவர் திவாகர் ம.இ.கா அலோர் ஸ்டார் தொகுதியின் செயலாளர் திரு குமரேசன் வேலாயுதம் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடதக்கது.

இக்கிளைக் கூட்டங்களில் உரையாற்றிய ம.இ.கா அலோர் ஸ்டார் தொகுதித் தலைவர்,
“திவாகர் குமரேசன் போன்ற மாணவர்களின் சாதனை நமது சமுதாயத்திற்குப் பெருமை சேர்க்கிறது.

பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கு மத்தியிலும் கல்வியில் சிறந்து விளங்கும் இம்மாணவர்கள், எதிர்காலத் தலைவர்களாக உருவெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை,” என்று குறிப்பிட்டார்.

மேலும், ம.இ.கா அலோர் ஸ்டார் தொகுதி எப்போழுதும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles