
தெஹ்ரான், ஏப் 6-
ரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடும் பணியில் ஈரானும் அமெரிக்காவும் போட்டி போட்டு ஈடுபட்டிருந்தன.
இந்தச் சூழலில் தேடப்பட்டு வந்த விமானப்படையின் இரண்டாவது வீரர் கிடைத்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தகவலை தனது தனது சோசியல் மெடியா மூலம் உறுதிப்படுத்தினார்.

