
கோலாலம்பூர் ஏப் 7-
வைசாகி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், gurdwara sahib polis High street இல் சீக்கியப் பணியாளர்களுடன் நடைபெற்ற 219ஆவது காவலர் தின நிகழ்ச்சியில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வருகை இந்த ஆண்டு கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
காவல்துறையில் சேவையாற்றத் தங்களை அர்ப்பணித்த ஒவ்வொரு சிங் மற்றும் கவுர் ஆகியோரிடமும் பொதிந்துள்ள, அமைதியையும் நீதியையும் நிலைநாட்டும் புனிதமான உறுதிப்பாடு உணர்வை நாம் போற்றுகிறோம்.
அவர்கள் ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்; அதைச் சுற்றியுள்ள விரைவான வளர்ச்சிக்கு மத்தியில் இந்தக் குருத்வாரா உறுதியாக நிற்பதைக் கண்டும் அதே அளவு பெருமைப்படுகிறேன் என்று அவர் சொன்னார்.
சமூகத்திற்குச் சேவை செய்வதில் அதன் தொடர்ச்சியான பங்களிப்பிற்கு, இயன்றவரை ஆதரவளிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

