KPKT, PR1MA-வின் நலிவடைந்த 34 திட்டங்களையும் வெற்றிகரமாக புனரமைத்து, 22,291 வீடு வாங்குபவர்களுக்குப் பயனளித்துள்ளது!

மலாக்கா, ஏப் 7- வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு (KPKT), மலேசிய PR1MA கூட்டமைப்பு (PR1MA) மூலம், தனது மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் உள்ள நலிவடைந்த 34 திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இதன் மூலம் 22,291 வீடு வாங்குபவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த வெற்றியானது, மலாக்கா மாநில அரசு, PR1MA மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பின் விளைவாகும்.

இந்தச் சாதனையானது, மலாக்காவில் உள்ள ரெசிடென்சி கிளெபாங் 2-இல், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ங்கா கோர் மிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ரெசிடென்சி கிளெபாங் 2 மற்றும் ரெசிடென்சி புக்கிட் கட்டில் ஆகியவற்றுக்கான சாவி ஒப்படைப்பு விழாவின் மூலம் நிறைவடைந்தது.

இதன் அடையாளமாக, 20 வீடு வாங்குபவர்கள் தங்களது வீடுகளுக்கான சாவிகளைப் பெற்றனர்.

இதன் மூலம், ஒரு தரமான கனவு இல்லத்தில் வாழ்வதற்கான காத்திருப்பு முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles