எண்ணெய் விலை உயர்வு குறித்து தவறான தகவல்கள் – பிரதமர் அன்வார் சாடல்

புத்ராஜெயா, ஏப்ரல் 9: எண்ணெய் விலை உயர்வு மலேசியாவில் மட்டும்தான் நடப்பதாகக் கூறப்படும் வாதங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக மறுத்துள்ளார்.

இத்தகைய கூற்றுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்களைக் குழப்பும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் அவர் சாடினார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், செல்வாக்குமிக்க சமய அறிஞர் ஒருவர் கூட இந்த விவகாரத்தில் ஆதாரமற்றக் கருத்துக்களை முன்வைப்பது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“மத ரீதியான பார்வைகளுக்குள் அறிவியலற்றக் கருத்துக்களைப் புகுத்தி, மற்ற நாடுகளில் எண்ணெய் விலை உயரவில்லை என்றும், மலேசியாவில் மட்டும்தான் உயர்கிறது என்றும் கூறுவது அறிவின்மையின் வெளிப்பாடாகும்.

இத்தகைய கருத்துக்கள் மக்களுக்கு உதவாது, மாறாக அவர்களைத் தவறாக வழிநடத்தும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles