
புத்ராஜெயா, ஏப்ரல் 9
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை மலேசியா வரவேற்கிறது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைத்து, மிகவும் தேவையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்த வளர்ச்சி அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
“மீண்டும் விரோதப் போக்குகள் ஏற்படுவதைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தின் அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக மதித்து, நேர்மையுடன் செயல்படுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

