
மா.பவளம்
கோலாலம்பூர் ஏப் 9-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அருள் பாலித்து கொண்டிருந்த தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் புதிய இடத்தில் அடிக்கல் நாட்டு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற இந்த விழாவில் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆகம முறைப்படி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் பார்த்தீபன் அவர்கள் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ வ
பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு புதிய இடத்தில் கோவில் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
கோவில் விவகாரம் சுமூகமான முறையில் தீர்வு காண முயற்சி செய்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பார்த்தீபன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் இப்பிரச்சினைகள் எல்லாம் முறை பேசி தீர்க்கப்பட்டு தற்போது புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்.
இவ்வேளையில் அவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காரணம் இவர்களை இல்லை என்றால் இவ்வாலயப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்காது என்று பார்த்திபன் கூறினார்.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின் ஆலயத்தின் பட்டுமானப் பணிகள் படிப்படியாக தொடங்கும். இரண்டு மாடிக் கட்டடமாக இவ்வாலயம் கட்டப்படும்.

