தற்போது நிலவும் வெப்பமான வானிலை வழக்கமான ஒன்றுதான் – மெட்மலேசியா

ஷா ஆலம், ஏப்ரல் 9: நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை ஓர் அசாதாரண நிகழ்வு அல்ல, மாறாக இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஏற்படக்கூடியதே ஆகும்.

பொதுவாக பிப்ரவரி முதல் ஜூன் வரை வெப்பமான காலநிலை நிலவும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரை வெப்பநிலை உச்சத்தை அடையும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெடம்லேசியா) தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார்.

வடகிழக்கு பருவமழையின் இறுதிக்கட்டத்தில் மழை மேகங்களின் பற்றாக்குறை ஏற்படுவதால் வெப்பநிலை அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக சூரியக் கதிர்கள் நேரடியாக பூமியின் மேற்பரப்பைத் தாக்குவதாகவும் அவர் விளக்கினார்.

“மேகம் எனும் குடை இல்லாதபோது, பூமியின் மேற்பரப்பு தடையின்றி சூரியனின் வெப்பத்தை நேரடியாகப் பெறுகிறது. இதனால், வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்கிறது,” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles