
சுங்கை,ஏப்11:
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் நாடறிந்த எழுத்தாளருமான சிவாலெனின் எழுதிய விரல் நுனியில் கவிதைத் தொகுப்பு நூல் இன்று 11.04.2026இல் சனிக்கிழமை வெளியீடு காணவுள்ளது.
சுங்கை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மாலை மணி 4.00க்கு நடைபெறவிருக்கும் இந்நூல் வெளியீடுக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ.சிவநேசன் தலைமையேற்க்கும் வேளையில் சுங்கை சிப்புட் கெஅடிலான் தலைவர் திரு.நோவிந்தன் கிருஸ்ணன் முதல் நூலையும் பெற்று கொள்கிறார்.
அதே வேளையில்,நூலாசிரியரின் ஆசிரியரும் எழுத்தாளுமான கவிஞர் மு.மணிக்குமார் மற்றும் தேசியத் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் திரு.பழனி சுப்பையாவும் வாழ்த்துரை வழங்குவதோடு நாடறிந்த கவிஞர் சிவா (சுங்கைப்பட்டாணி) நூல் அறிமுகமும் செய்கிறார்.
சமூகவியல்,அரசியல் உட்பட பல்வேறு நிலைகளில் சிவாலெனினின் வரிகள் கவிதைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ள நிலையில் புரட்சி சிந்தனையும் இந்நூலில் கவிதையாய் தொகுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாய் பெரும் நகரங்களில் நடைபெறும் நூல் வெளியீடுகளுக்கு மத்தியில் சுங்கை என்னும் சிற்றூரில் நடைபெறும் இந்நூல் வெளியீடுக்கு எழுத்தாளர்கள்,வாசகர்கள் உட்பட பொது மக்கள் என அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்க நூலாசிரியர் சிவாலெனின் அழைப்பு விடுத்தார்.
இந்நூல் குறித்த மேல் விவரங்களுக்கு 016-5684302 எண்ணில் சிவாலெனினைத் தொடர்பு கொள்ளவும்.

