
கோலாலம்பூர் ஏப் 11-
ஜொகூர் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிபிபி கட்சி தயாராக இருக்கிறோம் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
தேசிய முன்னணியில் ஒரு அங்கமாக பிபிபி கட்சி உள்ளது.
அந்த வகையில் பிபிபி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படும் வேளையில் தேர்தலை சந்திக்க நாங்களும் தயாராகி விட்டோம்.
இருப்பினும் எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இதனிடையே பிபிபி கட்சியின் 73 ஆம் ஆண்டு கொண்டாட்டம் கட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது என்றார்.
டி.ஆர். சீனிவாசகம் சகோதரர்கள் தொடங்கிய இந்த கட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு சுணக்கம் கண்டாலும் இப்போது மீண்டும் எழுச்சி பாதையில் செல்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

