கல்வி ஒன்றே மாணவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம்! பாப்பா ராயுடு கூறுகிறார்

ஷா ஆலம், ஏப் 12-
கல்வி ஒன்றே மாணவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

கல்வி கற்ற சமுதாயம் எல்லா காலத்திலும் மற்றும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும்.

அந்த வகையில் இந்திய சமுதாயமும் குறிப்பாக மாணவர்கள் கல்வியில் வெற்றி நடை போட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதேசமயம் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் மனம் தளர வேண்டாம்.

தீவேட் போன்ற தொழில் திறன் கல்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த ஒரு தொழில் முனைவராக வலம் வரலாம் என்றார்.

Spm தேர்வில் தேர்ச்சி பெற்ற Shah Alam Sri Muda Pusat Tusyen Arena Matriks மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆசிரியர் ஜனஹான் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது பாப்பா ராயுடு இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் செகு ஜனஹான் ஆறுமுகம் அவர்களின் சாதனைகளை பாராட்டும் வகையில் ஆசியாவின் விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles