கவிஞர் பாதாசனுக்கு இளைய தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது!

காளிதாஸ் சுப்ரமணியம்

சிரம்பான் மே 5-
நாட்டில் மிகவும் பிரபல கவிஞராக வலம் வரும் மணிக்கவிஞர் பாதாசன் அவர்களுக்கு இளைய தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இளைய தமிழவேள் ஆதி குமணன் நினைவு விழா கடந்த மே 1 ஆம் தேதி சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் அமுதா இளம்பரிதி தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் திருநாவுக்கரசு இந்த விழாவை சிறப்பாக நடத்தினார்.

இந்த விழாவில் சிறப்பு அங்கமாக மணிக்கவிஞர் பாதாசன் அவர்களுக்கு இளைய தமிழவேள் ஆதி குமணன் இலக்கிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles