மாஃபியா பெருநிறுவன விசாரணை முடிவு என்ன? அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி

கோலாலம்பூர், மே 5-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மாஃபியா பெருநிறுவன புலன் விசாரணை முடிவு என்ன என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேள்வியை எழுப்பி உள்ளார்.

இந்த விசாரணையின் ஆக கடைசியான நிலவரம் குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்று இதற்கு முன்னர் கேட்டு இருந்தேன்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் அமைச்சரவை தனது கவலையை தெரிவித்ததோடு முழு விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சரவை கேட்டுக் கொண்டது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட புகார்களில் குறிப்பிடப் பட்டுள்ள நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்தடுத்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

எனவே அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்து கொண்டிருக்கிறது? குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பது குறித்து ம் ஒரு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles