
சென்னை மே 5-
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 27 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டது.
இதில் தமிழ் நாடு பாஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும் மத்திய அமைச்சர் எல்.முருகன் அவிநாசி தொகுதியிலும் வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் தோல்வி கண்டனர்.
இந்த தேர்தல் தோல்வி பா.ஜ.க.வை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த முறை 4 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இம்முறை ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

