தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் – ஆளுநர் அறிவிப்பு

சென்னை மே 8-
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர்.

விஜய் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால் 112 இடங்கள் மட்டுமே உள்ளது.

இரண்டாவது முறையாக கவர்னர் அர்லேகரை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கவில்லை.

இதுபற்றி கவர்னருமான அர்லேகர் கூறியிருப்பதாவது;-

“பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்சினை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பிரச்சினை. மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது.

118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. 118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை.

விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை.

விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன்.

.தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles