நண்பர் விஜய்க்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து!

கோலாலம்பூர் மே 12-
ன் நண்பர் விஜய் தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்கள் இப்போது விஜய்யிடம், திரையில் அவர் ஏற்று நடித்த எந்தவொரு பாத்திரத்தையும் விட மிகப் பெரிய ஒரு பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

அவரின் ஒரு விரல் புரட்சி இப்போது மிகப் பெரிய சரித்திரம் படைத்துள்ளது.

மலேசியாவும் தமிழகமும் தலைமுறை தலைமுறையாக ஆழமான வரலாற்று, கலாச்சாரம், மக்களுக்கு இடையேயான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜய்யுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles