பெட்டாலிங் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் 99 குழுக்கள் பங்கேற்பு!

காளிதாஸ் சுப்ரமணியம்

ஷா ஆலம், மே 12-
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் 90 குழுக்கள் களமிறங்கவுள்ளன என்று
அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் 22ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

ஆண்கள் பிரிவில் 65 அணிகளும் பெண்கள் பிரிவில் 34 அணிகளும் களமிறங்கவுள்ளன.

ஆக மொத்தத்தில் 99 அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.

இன்று ஷாஆலம் சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் குலுக்கல் நிகழ்வுக்கு பின்னர் பத்துமலை செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

Oplus_131072

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கால்பந்து போட்டியில் ஆணகள், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது.

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணம் என்ற பெயரில் ஆண்களுக்கான போட்டி நடத்தப்படவுள்ளது.

பெண்கள் பிரிவுக்கான போட்டி முன்னாள் தலைவர் அமரர் ரவீந்திரன் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது என்றார்.

இன்று நடைபெற்ற குலுக்கல் நிகழ்வில் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு, பெட்டாலிங் சங்கத்தின் துணை தலைவர் குணசேகரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் இராமச்சந்திரன் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles