ஜூன் 7 பத்துமலையில் ‘வம்சம் புத்திர காமஸ்தி யாகம்’!

கோலாலம்பூர், மே 12 – குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்காக வம்சம் அமைப்பு சார்பில் ‘வம்சம் புத்திர காமஸ்தி யாகம்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளத்தில் நடைபெறவுள்ளது.

குழந்தை பாக்கியம் பெற ஆன்மீக மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, 500-க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், ஆன்மீக நிபுணர்கள் மற்றும் கிரிகுருக்கள் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் தாமதமாகும் காரணங்கள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்க உரைகள் வழங்கவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles