பாஸ்டர் மோசஸ் மெல்கிசிதேக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கு வாபஸ்!

ஷா ஆலம், மே 13-
ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாஸ்டர் மோசஸ் மெல்கிசிதேக் பாலசுப்ரமணியம் மீது நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு, சட்டத்துறை தலைமை அதிகாரி அலுவலகம் (AGC) குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற தீர்மானித்ததன் மூலம் இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது என்பதை தெரிவித்துக்
கொள்கிறோம்.

பாஸ்டர் மோசஸ் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவை AGC ஏற்றுக்கொண்டதையடுத்து, பாஸ்டர் மோசஸ் மெல்கிசிதேக் பாலசுப்ரமணியம் மீது இருந்த குற்றச்சாட்டுகள் “திரும்பப் பெறப்பட்டன” (digugurkan).

இன்று மே 13 ஆம் தேதி ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்த கடினமான காலகட்டம் முழுவதும் கர்த்தரின் கிருபைக்கும் விசுவாசத்திற்கும் மனமார்ந்த நன்றியை பாஸ்டர் மோசஸ் மெல்கிசிதேக் அவர்களும், அவரது மனைவி ஐவினா, குடும்பத்தினரும், பெட்ரா சுவிசேஷ மற்றும் விடுதலை திருச்சபை உறுப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கின் போது தொடர்ந்து ஜெபத்திலும் ஆதரவிலும் துணை நின்ற கிறிஸ்துவ சகோதரர் சகோதரிகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பாஸ்டர் மோசஸ் குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

அதேபோல், Messrs Selvam Shanmugam & Partners சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் திரு செல்வம் சண்முகம், டான் ஸ்ரீ ஷபி அப்துல்லா மற்றும் முழு தமது தரப்பு சட்டக் குழுவினருக்கும் தொழில்முறை அர்ப்பணிப்புடன் வழக்கை கையாண்டதற்காக சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

நன்றி.

பாஸ்டர் மோசஸ் மெல்கிசதேக் பாலசுப்ரமணியம்
தலைமை போதகர் மற்றும் ஸ்தாபகர்,
பெட்ரா சுவிசேஷ மற்றும் விடுதலை திருச்சபை

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles