சரக்கு ஏற்றுமதி ஆவணங்களில் முரண்பாடு; கடல்சார் துறைக்கு பெரிய அபாயமாகலாம்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கிள்ளான், மே 18 –
கப்பல் சரக்கு போக்குவரத்து, உலகளாவிய வர்த்தக துறையில், Bill of Lading (BL) ஆவணங்களுக்கும் உண்மையான சரக்கு நகர்வுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து வருவது கடுமையான செயல்பாட்டு ஒழுங்குமுறை அபாயங்களை ஏற்படுத்தலாம்.

கடல்சார் துறை நிபுணரான மேரிடைம் நெட்வொர்க் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் ராமசாமி கூறினார்.

பலர் பிஎல் ஆவணத்தை ஒரு சாதாரண கப்பல் போக்குவரத்து ஆவணமாகவே கருதுகின்றனர். ஆனால், அது உலக வர்த்தக அமைப்பில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.

பிஎல் ஆவணம் வங்கி பரிவர்த்தனைகள், காப்பீட்டு ஏற்பாடுகள், சுங்க அறிவிப்புகள், சரக்கு உரிமை நிரூபணம் மற்றும் சர்வதேச தடைகள் தொடர்பான இணக்கப்பாடுகள் போன்ற பல முக்கிய அம்சங்களுடன் தொடர்புடையது.

உண்மையான சரக்கு நகர்வும் ஆவணங்களும் ஒன்றோடொன்று பொருந்தாமல் போகும் தருணமே மிகப்பெரிய அபாயத்தை உருவாக்குகிறது.

செயல்பாடுகளுக்கும் ஆவணங்களுக்கும் இடையிலான எந்த முரண்பாடும் கப்பல் முகவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக்கக்கூடும்.

கப்பல் முகவர்கள் சரக்கின் உரிமையாளர்கள் அல்லாதபோதிலும், அதிகாரிகள், துறைமுகங்கள், பிற தரப்புகள் அவர்களால் செயல்படுத்தப்படும் ஆவணங்களை நம்புவதால் அவர்கள் நேரடி செயல்பாட்டு பொறுப்புகளை எதிர்கொள்கிறார்கள்.

இதன் காரணமாக கப்பல் முகவர்கள் தற்போது ஆவணங்களின் நம்பகத்தன்மை, உள்துறை இணக்க கட்டுப்பாடுகள் மற்றும் Know-Your-Customer (KYC) சரிபார்ப்பு நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக எண்ணெய் வர்த்தகங்களில், வியாபாரிகள், பெறுநர்கள், துறைமுகங்கள், அனுப்பும் முகவர்கள், லாஜிஸ்டிக் நிறுவனங்களிடமிருந்து வரும் தகவல்கள் ஆரம்ப பிஎல் ஆவணத்துடன் பொருந்தாமல் இருக்கும் சூழல்கள் உருவாகின்றன.

சரக்கு தொடர்பான தகவல்களில் பல்வேறு பதிப்புகள் உருவாகும் தருணத்தில் அபாய நிலை உடனடியாக அதிகரிக்கிறது.

ஏனெனில், ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு ரீதியாக ஆவணங்களில் ஒரே மாதிரியான நிலைத்தன்மையை கப்பல் முகவர்கள் உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

சரக்கு இறக்கப்பட்ட பின்னர் எண்ணெய் கலவை மற்றும் சேமிப்பு நடவடிக்கைகள் துறையில் சாதாரணமானவை என்றாலும், அவை சேமிப்பு தொட்டிகளில் கலந்தவுடன் அதன் தடயத்தைக் கண்காணிப்பது சவாலாக மாறுகிறது.

மேலும், சரக்குகள் மாற்றம், கலவை அல்லது கூடுதல் கையாளுதல் மூலம் செயல்பாட்டு ரீதியில் மாறினால், அதற்கேற்ப ஆவணங்கள், வகைப்பாடுகளும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles