
ஷா ஆலம், மே 13 – 2026-ஆம் ஆண்டிற்கான ‘சும்பாங்கான் துனாய் ரஹ்மா’ (STR) உதவித்தொகையின் மூன்றாம் கட்டத்தில் உதவியைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் எதிர்வரும் ஜூன் 15-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
இது குறித்து மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியம் (HASiL) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அல்லது தங்களின் முந்தைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்ய விரும்புபவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகுதியுள்ள பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை STR-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bantuantunai.hasil.gov.my என்ற முகவரி வாயிலாகவும் அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

