இது ‘தூய சக்தியா’ இல்ல, பிற கட்சி MLA-க்களை “தூக்குற சக்தி”யா.? தவெக-விற்கு வாக்களித்து விட்டு வருந்தும் மக்கள்

சென்னை: அதிமுக-வில் இரு அணிகள் உருவாகி இருக்கும் நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சில அதிமுக எம்எல்ஏ-க்கள், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.

ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles