சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிக்கு
பினாங்கு மாநில அரசு ஒரு லட்சம் வெள்ளியை வழங்கி பேருதவி

பினாங்கு மாநிலத்தில் உள்ள சுப்பிரமணிய பாராதி தமிழ்ப்பள்ளியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு பினாங்கு, பாயான் பாருவில் உள்ள சன்ஷைன் அரங்கத்தில் நடத்தப்பட்ட நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

70 ஆம் ஆண்டு நிறைவு எய்தியுள்ள சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து மேலும் 4 மாடி கட்டடம் தேவை எனும் கருதிய பள்ளியின் நிர்வாகம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியக் குழுவினர் இரவு விருந்நதோம்பளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முதலமைச்சர் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

மாநிலத்தில் பழமையானதாக கருதப்படும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக சுப்பிரமணிய பாரதி கருதப்படுவதால் அந்தப் பள்ளியின் கட்டுமானத்துக்கு உதவிடும் வகையில் ரிம100,000 மானியம் வழங்குவதாக அவர் அறிவித்தார்.

புதிய நான்கு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அதன் கட்டுமானத் திட்டத்திற்கு உதவும் நோக்கத்தில் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதலமைச்சர் செள குவான் இயோவ் கூறினார்.

இந்நிகழ்சியில் சிறப்பு பிரமுகர்களாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி சின், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன்,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஷ் முனியாண்டி,டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன்,டத்தோ மரியதாஸ் கோபால் மற்றும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் பா.வேணுகோபால் பள்ளி மேலாளர் வாரியக் குழு தலைவர் ஜெ.சுரேஷ் அர்வீன் பூபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles