

கோலாலம்பூர் மே 27-
உலக முழுவதும் முஸ்லிம் பெருமக்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று மிகவும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் மலேசியத் திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற
ஸ்தாப்பாக் Maahar Tahfiz Al Faridiyah மதராஸாவில் புனித ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது!
மதராஸா தலைவர் டத்தோ Haji Jawawar Ali தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.
பின்னர் ஆடுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடுகள் கொடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இவ்வாண்டு 150 க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

