கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா விமரிசையாக நடைபெற்றது!
மலேசிய திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மே 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.0 மணிக்கு மேல் விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
காலை 8.00 மணிக்கு மேல் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து விமான ராஜகோபுர பாலஸ்தாபன விழா ஆகம முறைப்படி தொடங்கியது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா , புவான் மல்லிகா நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், அறங்காவலர் கதிரேசன், டத்தோ கண்ணா சிவகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தற்போது கோவில் சுற்றி கருங் கற்கள் தூண்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா முன்னர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.