89 லட்சம் வெள்ளி செலவில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பளவில் லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டப்படுகிறது – அருள் குமார் அறிவிப்பு

சிரம்பான் மே 27-
Nilai-Labu MVV City மேம்பாட்டு திட்டத்தில் ரிம 8.9 மில்லியன் செலவில் புதிய தமிழ்ப்பள்ளியை இனைந்துக் கட்ட Matrix Concepts மற்றும் பள்ளி வாரியக் குழு புரிந்துணர்வு ஒப்பந்தம்

MVV City மேம்பாட்டு திட்டத்திற்கு அரசாங்க அனுமதி கிடைப்பதற்கு முன்னதாகவே, லாபு 4 தமிழ்ப்பள்ளிக்குப் புதிய இடம் பெற வேண்டும், பள்ளியை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும், மேலும் புதிய பள்ளிக்கூடக் கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற அனைத்து திட்டமிடல்களும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, Matrix Concepts நிறுவனத்தின் MVV City மேம்பாட்டு திட்டத்தில் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் மாநில அரசாங்கம் அந்த 6 ஏக்கர் நிலத்தை லாபு 4 புதிய தமிழ்ப்பள்ளிகூடம் கட்டுவதற்கு பள்ளி மேலாளர் வாரியக்குழுக்கு நில உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று லாபு 4 தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்கான புதிய கட்டிடத்தை கட்டுவதற்கான ஒரு Memorandum of Collaboration (MoC) அல்லது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் லாபு 4 தமிழ் பள்ளிக்கூடத்தின் வாரியக்குழுவும், மற்றும் MVV City மேம்பாட்டு திட்டத்தின் மேம்பாட்டாளரான Matrix Concepts நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட முக்கியமான ஒத்துழைப்பு முயற்சியாகும்.

இந்த பள்ளிக்கூடத்தின் புதிய கட்டிடத்தை Matrix Concepts நிறுவனமும் பள்ளியின் வாரியக் குழுவும் இணைந்து செயல்பட்டு கட்டிடத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை, Matrix Concepts நிறுவனத்தின் இயக்குநரான டத்தோ ஸ்ரீ லீ தியான் ஓக் அவர்கள் இதற்கு முன்னரே தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பல சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையில், 12 வகுப்பறைகள், மேலும் 13 சிறப்பு அறைகள், ஒரு கேன்டீன், ஒரு திறந்த வெளி மண்டபம், இரண்டு பாலர் பள்ளி வகுப்புகள், திடல் மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு புதிய பள்ளிக்கூடத்தை அமைப்பதற்கு ஏறக்குறைய RM9 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த RM9 மில்லியன் செலவில் குறைந்தது 50% Matrix Concepts நிறுவனம் ஏற்றுக்கொண்டு, மீதமுள்ள தொகையை பள்ளியின் வாரியக் குழு ஏற்றுக்கொள்ளும் என்ற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று நாம் செயல்படுத்திருக்கிறோம்.

கண்டிப்பாக, இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து அனைத்து தேவையான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்

இது தொடர்பாக நேற்று நம்முடைய போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் YB Anthony Loke அவர்களிடமும் இந்த பரிந்துரையை முன்வைத்தேன்.
அவரும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். குறிப்பாக, மத்திய அரசாங்கத்திலிருந்தும் மேலும் பல தனியார் துறை நிறுவனங்களிடமிருந்தும் தேவையான நிதி உதவிகளைப் பெற்றுத்தருவதற்காகவும் அவர் முயற்சி மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அரசாங்கம் தமிழ் பள்ளிகளின் மறுசீரமைப்பு, புதிய கட்டிடங்கள் மற்றும் புதிய தமிழ் பள்ளிகளை அமைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி வருகின்றது. அந்த சூழ்நிலையிலும், சமுதாயத்தின் பங்களிப்புடன், தனியார் நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுடன் இணைந்து நாம் இவ்வாறான தமிழ் பள்ளிக்கூட திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, இன்னும் விரைவாக புதிய பள்ளிக்கூடங்களை கட்டி முடிக்க முடியும்.

அதன் மூலம் தமிழ் பள்ளிகளின் நிலமை மற்றும் கல்வி சூழலை அனைவரும் இணைந்து மேலும் சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று நான் நம்புகின்றேன்.

ஜ.அருள் குமார்
நெகிரி செம்பிலான் ஊராட்சிமன்ற மேம்பாடு, வீடமைப்பு & போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர்
நீலாய் சட்டமன்ற உறுப்பினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles