

கடந்த 2/5/2026 ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மையத்தில் மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப்பேரவையின் 41 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சைவநெறிச் செல்வர் காசி சங்கபூஷன் தங்க கணேசன் இக்கூட்டத்தை அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமயம், சமூக சேவைகளில் சேவையாற்றி வரும் உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்த வகையில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்த வட்டாரப் பேரவையின் மகளிர் தலைவி திருமதி. சுமதி டத்தோ முத்துப்பிள்ளைக்கு தொண்டர்மணி விருது வழங்கப்பட்டது.
அதே நிகழ்வில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 2026/2027 தவணைக்கான வட்டாரத் தலைவராக விவேகரத்னா அருள்நேசன் ஜெயபாலன் நியமனக் கடிதம் பெற்றார்.
தொண்டர்மணி விருது பெற்ற திருமதி. சுமதி டத்தோ முத்துப்பிள்ளைக்கு, மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையினர் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றனர்.

