

ஊத்தாங் மெலிந்தாங் மே 31-
இந்திய சமுதாயத்திற்கு உண்மையாக சேவையாற்றி வரும் கட்சி ம இகா மட்டுமே என்று பாகான் டத்தோ தொகுதி இளைஞர் அணி தலைவரும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்.
மஇகா ஒரு ஆலமரம் போன்றது. மேலும் ஒரே குடும்பமாக இருந்து வருகிறது.
நாடு தழுவிய அளவில் ம இகா சிறப்பான முறையில் சேவையாற்றி
வருகிறது.
அந்த வகையில்
பாகான் டத்தோ தொகுதியும் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.
தொகுதி தலைவர் டத்தோ சுப்ரமணியம் தலைமையில் பாகான் டத்தோ தொகுதி மக்களை நேரில் சந்தித்து மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறது.
ம இகா வுக்கு டேப் கல்லூரி மற்றும் எய்ம்ஸ் பல்கலைக்கழகமும் இருக்கிறது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரம் சம்பளமும் வழங்கி வருகிறது.
பாகான் டத்தோ தொகுதியில் 14 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இந்த அனைத்து பள்ளிகளுக்கும் ம இகா நிதியுதவி வழங்கி வருகிறது
ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் ம இகா வெற்றி நடை போடுகிறது.
இந்திய சமுதாயத்தின் குரலாக எப்போதும் ம இகா விளக்கும் என்று அவர் சொன்னார்.
ம இகாவின் 80 ஆம் ஆண்டு கொண்டாட்டம் இன்று நாடு தழுவிய அளவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பாகான் டத்தோ தொகுதி ஏற்பாட்டில் இன்று பாகான் டத்தோ ஊத்தாங் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் குடும்ப தின விழா கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது .
அர்விந்த் அப்பளசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

