



கோலாலம்பூர், மே 30-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 100 ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர், வைகாசி விசாக உபய அறங்காவலருமான பெ. சந்திரசேகரன், உபய நாட்டாமை க. பூபாலன் , உபய பிரதிநிதிகளான கு. கோவிந்தசாமி, கி. ஜெயகணேசன் ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா தம்பதியர், தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமார், கதிரேசன், நாராயணசாமி, செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், மலேசிய சிலம்ப கழகத்தின் தேசிய துணைத் தலைவர் ஆர்.டி.உதயகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.



இந்த விழாவில் முக்கிய அங்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 19 உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் 2025 ஆண்டில்ட டிஎன்பியில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 25 க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சிவஸ்ரீ சிவகுமார் மற்றும் சிவனாந்தா குருக்கள் வைகாசி உபாயத்தை ஆகம முறைப்படி நடத்தி வைத்தனர்
டிஎன்பி பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.
அனைவருக்கும் சுவையான உணவும் பரிமாறப்பட்டது.

