ஜாலான் ரோப்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் மே 30-
சைட் புத்ரா ஜாலான் ரோப்சனில் உள்ள
ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் கோவில் (Sri Sakthi Maha Mariamman Alayam) என்பது கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் ஜாலான் ரோப்சனில் (Jalan Robson) அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக் கோயிலாகும்.

ஜாலான் சைட் புத்ரா, ஜாலான் செபுத்தே மற்றும் பிரிக்பீல்ட்ஸ் பகுதி இந்து மக்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகவும் இது விளங்குகிறது.

இன்று வைகாசி உபாயத்தை முன்னிட்டு ஜாலான் ரோப்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கோவில் தலைவர் மூர்த்தி டாக்டர் எம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் செயலாளர் ராமச்சந்திரன் முத்து,
பொருளாளர்
டத்தோ மணியரசு உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கோவில் ஜோதிடர் குருக்கள் கிருஷ்ணன் ஆகம முறைப்படி பூஜைகளை நடத்தி வைத்தார்.

பக்தர்கள் காலையில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மகேஸ்வர பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இதனிடையே ஜாலான் ரோப்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தற்போது புதிய கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் கோவில் ஆலோசகராக இருந்த போது கட்டுமான திட்டத்தை முன்னெடுத்தார்.

பல சவால்களை எதிர்கொண்டு இப்போது கோவில் நிர்வாகம் கட்டுமான பணி திட்டத்தை முன் எடுத்துள்ளது என்று தலைவர் டாக்டர் மூர்த்தி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles