
பாண்டன் இந்தா சந்தையில் பொதுமக்கள் புகார்கள், கட்சி உறுப்பினர் பதிவு மையத்தை அமைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரபிசி,
கட்சியின் தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, வரும் திங்கட்கிழமை முதல் வருங்கால வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும்.
ஜொகூரில் உள்ளூர் தலைவர்களுடன் பெர்சமா கட்சி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது.
நெக்ரி செம்பிலானில் அடுத்த வாரம் கலந்துரையாடல்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படையில், எங்களின் ஆரம்ப இலக்கு தொகுதிகளின் பட்டியலை, உள்ளூர் நிலைமை குறித்த அவர்களின் கருத்துக்கள், மதிப்பீடுகளுடன் நாங்கள் பொருத்தி வருகிறோம்.
வேட்புமனு தாக்கல் நாளுக்கு நெருங்கிய நாட்களில், ஜொகூர், நெக்ரி செம்பிலானில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள தொகுதிகளை கட்சி அறிவிக்கும்.
மூன்று வாரங்கள் மட்டுமே ஆன கட்சிக்கு, தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தயார் செய்ய போதுமான நேரம் இருக்குமா என்று கேட்டபோது நாளை திங்கட்கிழமை விண்ணப்பங்கள் திறக்கப்படும் .
அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணல்கள், மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

