ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட பிபிபி விருப்பம்!

ஜொகூர் பாரு, ஜூன் 7-
ஜொகூர் மாநிலத் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம், ஆனால் முடிவை BN-க்கே விட்டுவைக்கிறது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர்
Datuk Dr Logan Bala Mohan தெரிவித்துள்ளார்:

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் PPP இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கை குறித்து அண்மையில் Datuk Onn Hafiz Ghazi அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எந்தவித அழுத்தமும் கொடுக்காமல், இறுதி முடிவை முழுமையாக பாரிசான் நேஷனல் (BN) தலைமையிடம் விட்டு வைத்துள்ளதாக அவர் கூறினார்.

தொகுதிகள் வழங்கப்படாவிட்டாலும், PPP தொடர்ந்து BN-க்கு ஆதரவளித்து அதன் வெற்றிக்காக பணியாற்றும் என்று உறுதியளித்துள்ளார்.

தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் இயந்திரம் ஏற்கனவே செயல்பாட்டில் இறங்கியுள்ளது; BN ஒதுக்கியுள்ள பகுதிகளில் கட்சித் தலைவர்கள் தரைமட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், Negeri Sembilan மாநிலத் தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை PPP பரிசீலித்து வருகிறது.

அதுகுறித்து அங்குள்ள BN தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles