
கோலாலம்பூர் ஜூன் 7-
IPF-ன் மூத்த தலைவரும், அனைவராலும் அன்புடன் “IPF சிவா” என்று அழைக்கப்பட்ட திரு. முருகன் பெருமாள் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
IPF-யின் ஆரம்பகால வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றிய அவர், மறைந்த Tan Sri M.G. Pandithan அவர்களுடன் நெருக்கமாக இணைந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிறந்த தலைவராக விளங்கினார்.
அவரது மறைவு IPF குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது சேவைகளும், அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
மறைந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த துயரமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையும் ஆறுதலும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஆழ்ந்த இரங்கலுடன்,
IPF தொண்டர்கள் மற்றும் நண்பர்கள்

