மனித வள அமைச்சர் சிவகுமாரின் அதிரடி நடவடிக்கையால் பணிநீக்கம் செய்யப்பட்ட 102 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த நிறுவனம் முன் வந்தது

பணிநீக்கம் செய்யப்பட்ட 102 உள்ளுர் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனித வள அமைச்சு அறிவித்துள்ளது

பினாங்கு மாநிலத்தில் நிறுவனம் ஒன்று
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்காக உள்ளூர் தொழிலாளர்களை வேலை நீக்க செய்த சம்பவத்தை மனித வள அமைச்சர் வ சிவகுமார் கடுமையாக கண்டித்தார்

இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும்
முதலாளிகளுக்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உள்ளூர் தொழிலாளர்களை நீக்கிவிட்டு அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டால் மனிதவள அமைச்சு கடும் நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் மனித வள அமைச்சர் சிவகுமாரின் உத்தரவுக்கு இணங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் வேலை நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்ந்த முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles