
தம்பின், ஜூலை 20-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ரெப்பா தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த நான்கு தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற இவர் இப்போது ஐந்தாவது தடவையாக போட்டியிடுகிறார்.
தம்பின் உட்பட ரெப்பா சட்டமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் இவர் சேவையாற்றி இருக்கிறார்.

இரண்டு தவணைகள் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் ரெப்பா சட்டமன்ற தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு இருக்கிறார்.
ரெப்பா தொகுதி மக்களுக்கு மத்தியில் சிறந்த வேட்பாளர் என்ற முறையில் இவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

