
சிரம்பான், ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் இளம் வேட்பாளர் முகுந்தன் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு இவர் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்.
இருப்பினும் முகுந்தன் இங்கு பிறந்தவர் அல்ல. வெளிநபர் என்று அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதுபற்றி கருத்துரைத்த அவர், நான் மண்ணின் மைந்தர். ஏற்கெனவே எனது அரசியல் குரு டத்தோ குணசேகரனின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி இருக்கிறேன்.

சிரம்பான் ஜெயா தொகுதி மக்கள் எனக்கு நெருக்கமானவர்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் குணா வுடன் இணைந்து சேவையாற்றி இருக்கிறேன்.
வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இனம் நிறம் மதம் பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றுவேன் என்று முகுந்தன் குறிப்பிட்டார்.

