சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் முகுந்தனுக்கு ஆதரவாக டிக்கம் அணியினர் தீவிர பிரச்சாரம்!

சிரம்பான் ஜெயா, ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் சிரம்பான் ஜெயா தொகுதியில் போட்டியிடும் இளம் வேட்பாளர் முகுந்தனை ஆதரித்து ஜசெக இளம் தலைவர் டிக்கம் அணியினர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் கோட்டையாகும்.

கடந்த நான்கு தவணைகள் இந்த தொகுதியில் தோழர் குணா போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

இவரின் சிறப்பு அதிகாரி முகுந்தன் இம்முறை போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக டிக்கம் அணியினர் வீடு வீடாக சென்று வாக்கு திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles