
லுக்குட், ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ எம். ரவி புலனத்தில் வெளிவந்த ஒபடம் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
லுக்குட் உணவகம் ஒன்றில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன் மற்றும் இதர உறுப்பினர்களுடன் டத்தோ ரவி ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்.
இந்த படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இது பற்றி டத்தோ ரவியை தொடர்பு கொண்ட போது நாங்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டது உண்மைதான்.
என் வீடும் குடும்பமும் இங்கு தான் உள்ளது.
புனிதனை 25 ஆண்டுகளாக தெரியும். நல்ல நண்பர்.
ஜாலியாக பேசி சாப்பிட்டோம். ஆனால் சிலர் இந்த படத்தை வைத்து எனக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர்.
நான் கட்சி மாறிவிட்டதை போல் படம் காட்டி கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் எனக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர்
PKR கட்சியை விட்டு வெளியேறி எந்த கட்சியிலும் சேரவில்லை.
நாடாளுமன்றத்தில் கூட பக்கத்தான் ஹராப்பான் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
அதேபோல்தான் நானும் புனிதன் மற்றும் நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் ஆவேசமாக கேட்டார்
இந்த சந்திப்பின் போது என் அரசியல் அனுபவம் குறித்து புனிதன் கேட்டார்.
மறுமலர்ச்சி பேரணி முதல் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் பிரதமர் ஆகும் வரை நடத்திய போராட்டங்கள் மற்றும் எதிர் நோக்கிய சவால்கள் குறித்த அவரிடம் விளக்கினேன் என்று டத்தோ ரவி கூறினார்

