பதவியை நீக்கம் செய்யுங்கள் என்று பிரதமருக்கு அம்னோ தலைவர் சவால் விடுவது பொருத்தமற்றது! டத்தோஸ்ரீ அமினுடின்

சிரம்பான், ஜூலை 22-
துணைப் பிரதமர் மற்றும் அம்னோ தலைவருமானஜடத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, தன்னையும் மற்ற தேசிய முன்னணி அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சவால் விடுப்பது பொருத்தமற்றது.

நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய முன்னணி தலைவரின் அறிக்கை பிரதமரின் அதிகாரத்திற்கு சவால் விடுப்பது போல் தெரிகிறது.

அது உண்மையாக இருந்தால், அது ஒரு சவால் என்றே நான் கருதுகிறேன்.

பிரதமரின் நண்பருமான அவரின் அந்தக் கூற்று பொருத்தமற்றது என்று நான் நினைக்கிறேன் என்று லிங்கியில் பிரச்சாரம் செய்தபோது அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, மத்திய அரசாங்கத்தில் உள்ள சக ஊழியர்களைத் தாக்குவதற்கு எந்தவொரு அமைச்சர், துணை அமைச்சர், அரசாங்க நிறுவனங்களில் உள்ள அலுவலகப் பொறுப்பாளர்களும் தங்கள் பதவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles