நான்கு பிள்ளைகளுடன் சிரமப்படும் வனிதா குடும்பத்திற்கு
உதவிக் கரம் நீட்டினார் மனித வள அமைச்சர் சிவகுமார்

பேராக் மாநிலத்தில் Jalan ketetapi lama pusing என்ற இடத்தில் கஷ்டமான சூழ்நிலையில் வாழும் இந்திய குடும்ப மாது வனிதா கோவிந்தசாமி என்பவரை
நேரில் சந்தித்த மனித வள அமைச்சர் வ சிவகுமார் அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்துக் கொடுத்தார்.

கணவரை இழந்து நான்கு பிள்ளைகளுடன்
மிகவும் கஷ்டமான நிலையில் வாழும் இந்த குடும்பம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு ஆயிரம் வெள்ளியையும் அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் நான்கு பிள்ளைகளும் பள்ளி பயில்கின்றனர்.

மேலும் வனிதா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை.

இந்நிலையில் பத்து காஜா நாடாளுமன்ற சேவை மையம் மற்றும் சமூக நல இலாகா மூலம் மாதந்தோறும் இந்த குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்கவும் மனித வள அமைச்சர் சிவகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles