தொழில் துறைகளில் பெண்களுக்கு பரந்த வாய்ப்புகள்! மனித வள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

TalentCorp மூலம் மனித வள அமைச்சு
எப்போதும்
தொழில்துறையில் ஈடுபடும் பெண்கள் முன்னேறுவதற்கு பரந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் இயோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த மனித வள அமைச்சர் சிவகுமார் சில அறிவிப்புகளை செய்தார்

பெண் தொழிலாளர்களை பாதுகாக்கும் பொருட்டு வேலை சட்டம் 1955 திருத்தத்தின் திருத்தம் அமலாக்கத்துடன்
2022 ஜனவரி 2023 முதல் நடப்புக்கு வந்துள்ளது என்றார்.

பெண்களுக்கு வேலை வாய்ப்பில் பாகுபாடு காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

மகப்பேறு விடுப்பு 60 நாட்களில் இருந்து 98 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெகிழ்வான வேலை ஏற்பாடுகள் மற்றும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் வழங்கப்படுகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles